அபிநந்தனை ஒப்படைக்கும் வரை லாகூரில் இருந்த பிரதமர்!

463

பாகிஸ்தானில் போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தன் நேற்று மதியம் ராவல் பிண்டியில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் லாகூருக்கு வந்து சேர்ந்தார்.

லாகூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடி அவர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கை பணிகளை கேட்டறிந்தார். அபிநந்தன் தொடர்பாக என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை முற்றிலுமாக தணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்ரான்கான் லாகூர் வந்து தங்கியிருந்ததாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘இரவு 9.30 மணிக்கு அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில்தான் இருந்தார். இரவு 10.30 மணிக்குதான் அவர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார்’ என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of