அபிநந்தன் பாகிஸ்தனிடம் ஆரம்பம் முதல் இறுதிவரை..,

212

உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு துணை நிற்கின்றது என்பதை நாம் அறிந்த நாள் பிப்ரவரி 14. ஏன் என்றால் அன்று தான் இந்தியாவை பெரும் துயரத்தில் ஆழ்த்திய புல்வாமா தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதல் பற்றிய சில நினைவுகளும், அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தமிழகத்தின் சிங்கக் குட்டியை பற்றிய சிறு துளிகள்..,

பிப்.14: காஷ்மீர் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பல நாட்டு தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை வீரர்கள் குண்டு மழை பொழிந்ததில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், அவர்களின் குடியிருப்புகளும் அடியோடு அழிக்கப்பட்டன.

பிப்.27: இருப்பினும் அடங்காத பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குல் அத்து மீறி பறந்தனர், அவர்களை அதிரடியாக விரட்டிய போது இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்ட போது அவரை பற்றி பல வீடியோக்கள் இணையதளத்தில் பரவி வந்தன. அதில் சில அவரை கஷ்டப்படுவது போன்றும், சில வீடியோக்களில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்வது போன்றும் வெளியானது.

எதிரி நாட்டில் இருந்த போதும் தனது கண்ணில் சற்றும் பயத்தை காட்டாமல், இந்தியன் என்ற கர்வத்தோடு நின்றார், தமிழகத்தின் வீரமகன் அபிநந்தன்.

பிப்.28: பல நாடுகள் அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணத்தால் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் போரை விரும்ப வில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

மார்ச்.1: இந்திய மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அபிநந்தன் முறுக்கு மீசையுடன் வீர நடைப்போட்டு இந்திய எல்லைக்குள் அடியெடுத்து வைத்தார்.

அபிநந்தன் தாயகம் வந்ததை இந்தியா முழுவதும் பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல் கட்சிதலைவர்களும் கோலாகளமாக கொண்டாடினர்.

மார்ச்.2: ஆம் தேதி இன்று மருத்துவமனையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பு.

இந்த வீரமகனின் செயலை இத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இலை போல் மண்ணில் மக்ககாமல் அது விதைப்போல் அதிலிருந்து எண்ணற்ற பல அபிநந்தன் உருவாக்கப்படுவார்கள்.

(இந்த வீரமகனின் அசாத்திய வீரத்தால் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு அவர் பெயரை சூட்டி பெற்றோர் மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளை அழிக்கப்பயன்படுத்திய “மிராஜ்” விமானத்தின் பெயரையும் சூட்டி பெற்றோர்கள் மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)