விமானி கைது. பாக். வெளியிட்ட ஆதாரம் .

798
abhinanthan.27.2.19

புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் போர் ஏற்படும் சூழல் நிலவிவரும் இந்நிலையில், இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய சர்வீஸ் எண் 27981. அவர் இப்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ளார் எனவும் தெரிவித்தது.

இதனையடுத்து இந்தியாவின் மிக்-21 விமானத்தில் சென்ற கமாண்டர் அபினந்தன் திரும்பவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்போது மத்திய அரசின் சார்பில் விமானி ஒருவர் மாயமாகியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் படையினரால் இந்திய விமானி ஒருவர் கைது செய்யப்படும் கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அபிநந்தன் கேரளாவை பூர்விகமாக கொண்டவர் என்றும் தாம்பரம் விமானப்படை தலத்தில் பயிற்சிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.