பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு ஆப்பு! அமைச்சரவையின் அதிரடி திட்டம்!

705

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப, அந்த காலங்களில் இந்தியாவில் பெரும்பாலானவர் கூட்டுக்குடும்பமாப வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது, இந்த கூட்டுக்குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

பிள்ளைகள் தங்களது பெற்றோரை தனியாக தவிக்கவிட்டு தனிக்குடித்தனம் சென்றுவிடுகின்றனர். இந்நிலையில் இந்த மாதிரியான பிள்ளைகளுக்கு ஜெயில் தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

Advertisement