சுதந்திரம் பெற்றவுடன் அமைந்த முதல் அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றனர் தெரியுமா

3657

வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு, தேசம் சுதந்திரமடைந்த நாள். 1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் யார் யார் எல்லாம் இடம் பெற்றனர். அவர்கள் வகித்த பதவிகள் என்ன என்பது பற்றி விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு…

நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். 1947ல் சுதந்திரம் பெற்றவுடன் 14 பேர் கொண்ட முதல் அமைச்சரவை பதவியேற்ற போது நேரு பிரதமராக பதவி ஏற்றார்.

புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று குறிப்பிடுவதுண்டு.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேல் பதவியேற்றார். உள்துறை அமைச்சராக பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ஜான் மாதாய், ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றார்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சர்தார் பால்தேவ் சிங், பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ஜெகஜீவன் ராம், நேரு தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.

இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சி.எச்.பாபா, வணிக துறை அமைச்சராக பதவியேற்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சண்முகம் ஷெட்டி, நிதி துறை அமைச்சராக பதவியேற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழர்.

பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். இவரின் பொருளாதார மேதைமையைப் பார்த்து, அவர்தான் சுதந்திர இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் என முடிவு செய்யப்பட்டார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ரபி அகமது கித்வாய், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

விடுதலைப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமானவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ராஜ்குமாரி அமித் கவுர், சுகாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உணவு, விவசாய அமைச்சராக பதவியேற்றார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ஷியம்பிரகாஷ் முகர்ஜி, தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் காட்கில் எரிசக்தி மற்றும் சுரங்கம் துறை அமைச்சராக பதவியேற்றார்.

சமகால அரசியலை குற்றம் கூறிக் கொண்டு நமக்கும் இந்த தேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிப் போய் விடாமல்….பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்பதோடு…சுதந்திர தேசத்தின் பெருமைகளை ஒவ்வொரு சக இந்தியரிடமும் எடுத்துரைப்போம்…! ஜெய்கிந்……

Advertisement