80 வயது காமக்கொடூரனின் கேடுகெட்ட செயல்…

299

ஆந்திர மாநிலத்தில் பணத்தை காட்டி சிறுமிகளை தனது இச்சைக்கு ஈடுபடுத்திய 80 வயது காமக்கொடூரனின் கேடுகெட்ட செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம் காஜீவாக்க பகுதியை சேர்ந்த 80 வயதுள்ள காமக்கொடூரன் நெல்லி சாதுராவ் என்பவர் பணத்தை காட்டி சிறுமிகளை சீரழித்துள்ளான்.

பொருளாதாரரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு அமைச்சர்கள், எம்பி.க்களை தெரியும் என்றும் அரசு நலத்திட்டத்தில் வீடு, வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்கள் மற்றும் சிறுமிகளை தனது இச்சைக்கை இனங்க வைத்துள்ளான்.

பேத்தி வயதுடைய சிறுமியை தனது அலுவலகத்தில் வைத்து பணத்தை காட்டி காம செயல்களால் தனது இச்சையை தீர்த்துள்ளான்.

முன்னதாக தெலுங்குதேச கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தெலுங்கு நாடு டிரேட் யூனியன் கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினராக நெல்லி சாதுராவ் செயல்பட்டு வந்தான்.

இந்த செயல்களின் மூலம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தெலுங்கு தேச கட்சி நீக்கியுள்ளது.

தலைமறைவான காமக்கொடூரன் நெல்லி சாதுராவை போலீசார் தேடி வருகின்றனர்.

சமூகத்தில் ஆசை வார்த்தைகள் மூலமும், இயலாமையை காரணம் காட்டி பெண்களை சீரழிக்கும் வேலை நாளும் நடப்பது வேதனையிலும் கொடுமையாக உள்ளது.