பாஜக-வை விமர்சித்த பேராசிரியரை முட்டிப்போட வைத்து துன்புறுத்திய ABVP அமைப்பினர்

573

பாஜகவை விமர்சித்த கல்லூரி பேராசிரியரை மண்டியிட வைத்து ABVP அமைப்பினர் மன்னிப்பு கேட்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் சந்தீப் வாதர் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலுக்கு பாஜக தான் காரணம் என்று பதிவு செய்திருந்தார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில்,

“பாஜகவை சேர்ந்த பக்தாக்கள் ஏன் அதிகம் சத்தமிடுகிறார்கள் என்றும், அவர்கள் தான் பல லட்சம் மக்களை பதட்டமடையச் செய்யும் வகையில் போரை தூண்டிவிடுவதாகவும், இது பாஜக தலைகுனிய வேண்டிய ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இந்த பதற்றத்தை பயன்படுத்தி பாஜக அரசியல் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.”

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஏபிவிபி அமைப்பினர், கல்லூரியில் ரகளையில் ஈடுப்பட்டனர். பேராசிரியர் சந்தீப் வாதரை முட்டிப்போட வைத்து மன்னிப்பு கேட்க சொல்லி அத்துமீறலில் ஈடுபட்டனர். அதோடு இனிமேல் பாஜகவை விமர்சிக்ககூடாது என சத்தியம் வாங்கியுள்ளனர்.

abvp attack

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன நாயக நாட்டில் ஒரு கட்சியை விமர்சிக்ககூட உரிமை இல்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

பேராசிரியரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க சொல்லி அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of