ஐஎன்எக்ஸ் வழக்கு : ஜோடிக்கப்பட்ட வழக்கு – கார்த்தி சிதம்பரம்

89

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் தந்தையை கைது செய்துள்ளனர் என சிதம்பரத்தின் மகன் கார்த்தி எம்.பி. கூறினார்.

அவர் கூறியதாவது: என் தந்தை கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. சி.பி.ஐ. அனுப்பியுள்ள அனைத்து சம்மன்களுக்கும் அவர் ஆஜராகி உள்ளார்.

யாரையோ திருப்திபடுத்தவும் பரபரப்புக்காகவும் 2008ல் நடந்த விஷயத்திற்கு 11 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மக்களிடமிருந்து திசை திருப்புவதற்காக கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் தந்தையை கைது செய்துள்ளனர். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of