இந்த மனசு யாருக்கு வரும்??- இளைஞருக்கு குவியும் பாரட்டுக்கள்

2609

ஒடிசாவில், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண், தமது சிகிச்சையின் போது உதவியாக இருந்த நண்பரையே திருமணம் செய்து கொண்டுள்ளார். ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூரைச் சேர்ந்த பிரமோதினி ரௌல் என்ற பெண் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு சிகிச்சையின் போது சரோஜ் என்பவர் பெரிதும் உதவியுள்ளார். இந்நிலையில், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானதில் இருந்து தமக்கு உதவிகரமாகவும், ஆறுதலாகவும் இருந்த அவரையே பிரமோதினி ரௌல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய பிரமோதினி ரௌல், ஆசிட் வீச்சில் தான் தாக்கப்பட்டதில் இருந்து, அவர் தமக்கு பெருமளவில் உதவியதாகவும், ஆசிட் வீச்சால் வாழ்க்கையே தொலைந்ததாக நினைத்திருந்த நிலையில், தமக்கு வாழ்க்கை கொடுத்த அவருடனே வாழ்க்கை பயணத்தை தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞருக்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

Advertisement