அசிடிட்டி இருக்கா..? அப்போ இது உங்களுக்குத்தான்

1710

அசிடிட்டி என்றால் என்ன…? இது எதனால் வருகின்றது…? மேலும் இதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து கீழ்வரும் குறிப்புகளில் பார்க்கலாம்

அசிடிட்டி எப்படி வருகின்றது..? :

நாம் உண்ட உணவு செரிமானமாக வயிற்றுப்பகுதியில் “HydroChloric Acid” என்ற அமிலம் சுரக்கின்றது அது அளவுக்கு அதிகமாக சுரக்கும்பொழுது அசிடிட்டி வருகின்றது.

Image result for hydrochloric acid in stomach

அசிடிட்டி வருவது எதனால்..? :

காலை உணவு உண்ணாமல் வெரும் வயிற்றுடன் இருப்பதாலும், உண்ட உணவு சரிவர செரிமானமாகாமல் இருப்பதாலும்; மேலும், Hydrochloric Acid வயிற்று பகுதியில் அதிம் சுரப்பதாலும்; அதிக குடி மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாவதாலும் அசிடிட்டி வருகின்றது.

அதுமட்டுமில்லாது அதிக கொழுப்பு நிறைந்த Chocolates உண்பதாலும் கூட அசிடிட்டி வர வாய்ப்பு இருக்கின்றது.

நொறுக்கு தீனிகள், கார வகை உணவுகள், வெப்பம் நிறைந்த பகுதியில் இருத்தல், இது அனைத்தயும் விட மிக முக்கியமான ஒன்று அதிக கோபம் மற்றும் கவலை படுவதாலும் அசிடிட்டி வருகின்றது.

உண்ணக்கூடாதவை :

உணவில் காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முட்டைக்கோஸ், தக்காளி, ஊறுகாய், வறுத்த உணவுகள், வெங்காயம், மிளகு, முள்ளங்கி, இதுமட்டுமல்லாது மது மற்றும் புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

Foods-Do-Not-Eatஉண்ணவேண்டிய உணவுகள் : 

ஆப்பிள், வாழைப்பழம், தேங்காய், பூண்டு, தினை, பட்டாணி, பீன்ஸ், Fresh Vegetable Juice, காரட், முளைத்த பீன்ஸ், தர்பூசணி.Foods-Do-Eatஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதை நினைவில்கொண்டு அளவோடு உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of