ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் – தேர்தல் ஆணையம்

294

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்தது.

இதில் தேனி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்கள் அடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். எனவே, இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு கோரிய 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of