அவரோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி | Nandita Das

552

சாய் பல்லவி பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி, வெகு விரைவில் தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தெலுங்கு மற்றும் தமிழில் தலைசிறந்த நடிகையாக வலம்வருகிறார்.

தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அமெரிக்காவில் நடிகர் ராணா டகுபதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இயக்குனர் சமீபத்தில் நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி தொடர்பான காட்சிகளை முதலில் படம் எடுத்து முடித்தார்.

sai

நடிகை சாய் பல்லவியுடன் நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என்றும் அவருக்கு அற்புதமான திறமையிருக்கிறது என்று நடிகை நந்திதா தாஸ் பாராட்டினார். இந்த படத்தின் கதை ஆந்திர மாநிலத்தில் இருந்த முன்னாள் நக்சலிசத்தை பற்றியது. சாய் பல்லவியின் கதாபாத்திரம் தெலுங்கானாவின் பிரபல நாட்டுப்புற பாடகரை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.