ஆர்.கே.நகர் தேர்தலின் “சோதனை நடத்தியதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?”

524

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலின் போது 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா தொடர்பாக , அமைச்சர் வீட்டில் கைப்பற்றிய பணம் தொடர்பான விசாரணை எந்த நிலையில் உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணப்பட்டுவாடா குறித்து சோதனை நடத்தி ஓராண்டு ஆகியும் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, எப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட்டது வருமான வரித்துறைக்கு ஏன் தெரியவில்லை? என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, பணப்பட்டுவாடா பட்டியல் தொடர்பாக 884 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் என்பவர் யார்? என்பது குறித்து இணை ஆணையர்கள் பொறுப்பில் இருந்த மனோகரன், அன்பு ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 17-ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பதில் அளிக்கவும் ஆணையிட்டனர்.