பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை

229

பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்.

சென்னை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்
டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் 20 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நகரமைப்பு ஆய்வாளர் ஜெயந்தியிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.