சின்ன தம்பியை கும்கி யானையாக மாற்ற முடிவு..! திண்டுக்கல் சீனிவாசன்

700

கோவை சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டு யானை “சின்னத்தம்பி” அனைவருக்கு ஹீரோவாக மாறிவிட்டான்.

விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தவிர சின்னதம்பியின் மீது எந்த புகாரும் இல்லை. சின்னத்தம்பி மிகவும் நல்லவன் என்றும் அவனை கோபப்படுத்தாமல் இருந்தால் அவன் யாரையும் தொந்தரவு செய்யமாட்டான் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, விவசாயிகள் அளித்த புகாரை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி சின்னதம்பியை வனத்துறையினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தி ஒருவழியாக பிடித்து ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

சின்னத்தம்பியின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி மீண்டும் பொள்ளாச்சி பகுதியில் நுழைந்த சின்னதம்பியை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர்..

தற்போது, சின்னதம்பி வனப்பகுதிக்கு செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறான். இதுகுறித்து கோவையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திருப்பூர் மடத்துக்குளத்தில் சுற்றுத்திரியும் காட்டு யானை சின்ன தம்பியை கும்கி யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை எனவும், எனவே கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of