தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தால் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்

703

அரசின் மீது தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தால் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என்று, மின்துறை அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும், யாராவது எழுதி கொடுக்கும் அறிக்கையை ஆய்வு செய்யாமல் அப்படியே வெளியிடுவதாக அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.

மின்சார வாரியம் எந்த நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சார வாரியத்திற்கு 9 கோடி ரூபாய் பெற நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கு பணம் கொடுத்துவிட்டதாக கூறுவது தவறான பிரச்சாரம் என்று தெரிவித்த அமைச்சர் தங்கமணி, குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்த பிறகு கருத்து தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கினார்.

அரசின் மீது தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தால் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக தான் மின்வெட்டு இருக்கிறதே தவிர, இன்றும் தமிழகம் மின்மிகை மாநிலமாக தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.