நேற்று பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பள்ளிகல்வித்துறை

517

ஏற்கெனவே அறிவித்தபடி நேற்று பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது விதி 17 B -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப பள்ளிக் கல்வித்துறை வழங்கிய அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

இதையடுத்து நேற்று பணிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் மீது விதி 17 B -ன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடவடிக்கைக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறியுள்ளது.

இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement