நிவாரணப் பணிகளில் தாமதம் என்று தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – சத்யகோபால்

188
sathyagopal

நிவாரணப் பணிகளில் தாமதம் என்று தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சத்திய கோபால், தற்போதையை நிலவரப்படி 439 முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையானவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் தொடர்பு கொள்ள முடியாத இடங்களில் மீட்பு பணிகள் தாமதமாவதாக தெரிவித்த அவர், ஊடகங்கள் மூலமாகவோ அல்லது வேறு தகவல் வந்தால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

அரசு சார்பில் 24 மணி நேரமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் எனவும் சத்திய கோபால் கூறினார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.