நடிகர் அக்‌ஷய் குமாரை நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட ரஜினியின் ஜோடி..! – அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!

588

மிஷன் மங்கள் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷ்ய் குமாரை நடிகை சோனாக்ஷி சின்ஹா சேரில் இருந்து தள்ளிவிடும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் மிஷன் மங்கள். வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சின தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.


படம் விரைவில் ரிலீசாவதையொட்டி படக்குழுவினர் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகை சோனாக்ஷி சின்ஹா விளையாட்டுக்காக நடிகர் அக்ஷய் குமாரை சேரில் இருந்து தள்ளிவிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி உள்ளிட்ட மிஷன் மங்கள் படக்குழுவினர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் அக்ஷன் குமார், சோனாக்ஷியை வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சோனாக்ஷி, அக்ஷய்யை நாற்காலியோடு பின்புறம் தள்ளி விடுகிறார். இதில் நிலை தடுமாறி அக்ஷய் குமார் பின்பக்கமாக விழுகிறார்.

இதை பார்த்த தொலைக்காட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தன்னை யாராவது கடுப்பேற்றினால் இப்படி தான் செய்வேன் என சோனாக்ஷி கூறினார். இதனால் அரங்கமே அமைதியானது.

சிறிது நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துவிட்டனர். பின்னர் தான் தெரிந்தது இது அக்ஷயின் ஐடியா என்பது. இதுகுறித்து பேசிய டாப்சி, அக்ஷய் குமார் தான் இந்த யோசனையை கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே சோனாக்ஷி அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார்.

இந்த வீடியோவை சோனாக்ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 2.0 படத்தில் ரஜினியின் வில்லனாக நடித்திருந்தார் அக்‌ஷய். அதேபோல், லிங்கா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி. பாலிவுட்டில் அவரை லேடி ரஜினி என்றே குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of