துப்பாக்கி சுடுதல் போட்டி..! போட்டியாளர்களை மிரள வைத்த அஜித்..! ரிசல்ட் என்ன தெரியுமா..?

770

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி, எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்வது கிடையது. அவ்வளவு ஏன், தனது படத்தின் ஆடியோ லாஞ்சில் கூட கலந்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

சமீப காலமாக அவரது படங்களுக்கு ஆடியோ லாஞ்ச் வைக்கப்படுவதில்லை. அந்த கதை வேறு.., இவ்வாறு அஜித் எந்த வித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதே அவரது கெத்து என்றும், அவரை காண திரையரங்கிற்கு மட்டும் தான் வர வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காவலர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட தல அஜித், முதல் சுற்றில் 71 புள்ளிகளும், அடுத்து முறையே 79, 83, 81 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of