அஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி

460

நடிகர் அஜித்தின் விவேகம் பட வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனம், தியாகராஜனிடம் நான்கு கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

ஆனால் படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி அந்த நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.