அமிதாப் பச்சனுக்கு இந்த நோயா! அதிர்ச்சியில் திரையுலகம்!!

427

நடிகர் அமிதாப் பச்சன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர். அவரின் படங்கள் பற்றி இந்த தலைமுறை ரசிகர்களும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தனக்கு, எப்பாடீடிஸ் பி (Hepatitis B) என்ற நோய் இருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதராக அமிதாப் பச்சனை உலக சுகாதார நிறுவனம் நியமித்துள்ளது.

தனக்கும் அந்த நோய் இருப்பதாகவும், ஆனால் சாதாரண வாழ்க்கை வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றிய நிகழ்வில் பேசிய அமிதாப், இந்த நோய் உள்ள பெண்களை ஒதுக்கி வைப்பது தவறு என்றும், திருமணமான பெண்கள் இந்த நோயால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டு விடுகிறார்கள் என அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், என்னுடைய முகம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் என்பதால் இது பற்றி பேசுகிறேன் என அவர் தெரிவித்தார்.