“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..!

423

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி படங்களின் வரிசை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தில் தொடங்கி ஓவியாவின் 90 எம்.எல். வரை பல்வேறு திரைப்படங்கள் அடல்ட் காமெடி வரிசையில் வெளியாகி வந்துக்கொண்டிருக்கின்றன.

இதில் சில படங்கள் ஹிட் அடித்திருப்பதால் இதே பாணியில் சில படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அட்டகத்தி தினேஷின் புதிய திரைப்படமும் இணைந்துள்ளது.

டெம்பிள் மங்கிஸ் என்ற யு டுயூப் சோனலை சேர்ந்த விஜய் வரதராஜா இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தில், சஞ்சிதா ஷெட்டி உட்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.

ஜாம்பி ஜானரில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு, பல்லு படாம பாத்துக்கோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை எதிர்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று உலக அரசியலை பேசிய திரைப்படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷ், தற்போது பல்லு படாம பாத்துக்கோ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of