தலைவி படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..? ஏன் தெரியுமா..?

1038

கிரீடம், தலைவா, தெய்வத்திருமகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் என்.டி.ஆரின் கதாபாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவை நடிக்க வைப்பதற்கு இயக்குநர் ஏ.எல்.விஜய் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

ஆனால், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஏற்கனவே நடித்துவிட்டதால், மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணா மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.

ஜெயலலிதாவும், என்.டி.ஆரும் திரையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of