அதெல்லாம் பன்ன முடியாது! தேர்தல் குறித்து பேசிய சிரஞ்சீவி?

692

தென்னிந்திய நடிகர்கள், உச்ச கட்ட நட்சத்திரமாக மாறிய பின் அரசியலுக்கு வருவது புதிதல்ல, அந்த வகையில் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று, எம்எல்ஏ, பின்னர் எம்.பி மத்திய அமைச்சர் என பதவி வகித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.

இந்நிலையில் சிரஞ்சீவியின் சகோதரர், பவன் கல்யாண் ஜன சேனா என்ற கட்சியை ஆரம்பித்து, தற்போது நடைபெற உள்ள ஆந்திரா சட்டசபை தேர்தலையும், லோக்சபா தேர்தலையும் சந்திக்க உள்ளார்.

இதனால் வரும் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆனால் ஒரு சில காரணங்களுக்காக, சகோதரருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் முடியும் எந்த ஒரு பொதுநிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ள போவதில்லை என்றும், அவர் முடிவெடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement