அஜித்தின் புகைப்படத்திற்காக சம்பளத்தை இழந்த ரசிகர்?

660

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் டெல்லி கணேசும் நடிக்கிறார். அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் அனுபவம் குறித்து டெல்லி கணேஷ் கல்லூரி விழா ஒன்றில் தெரிவித்தார்.

அந்த விழாவில் அவர் கூறியதாவது,

“செட்டில் இடைவேளையின்போது நானும், அஜித்தும் நிறைய பேசுவோம். அப்படி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது என் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்து ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்து அவரிடம் தெரிவித்தேன்.

படம் நன்றாக இல்லை என்று விமர்சித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என் மகனின் படத்தை விநியோகஸ்தர்கள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று அஜித்திடம் கூறி வருத்தப்பட்டேன். நான் சொன்னதை கேட்ட அவர் உங்க பையன் நடிக்கிறாரா என்று கேட்டார்.

என் மகன் படத்தின் ட்ரெய்லரை அஜித்துக்கு செல்போனில் காட்டினேன்.
ட்ரெய்லரை பார்த்த அஜித், உங்கள் மகன் நன்றாக இருக்கிறார், நல்லா நடித்திருக்கிறார்.

அவரை நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். உடனே என் மகனுக்கு போன் செய்து ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு வரச் சொன்னேன். என் மகனுக்கு அஜித் ஊக்கம் அளித்தார். அவர் நல்லா வருவார்.

அதற்கு நாம் ஏதாவது செய்யலாம் என்றார் அஜித். நான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் வேறு எந்த நடிகரும் அஜித் போன்று அந்த வார்த்தையை சொல்லவில்லை.

என் கார் டிரைவர் உங்களின் தீவிர ரசிகர் என்று நான் அஜித்திடம் கூறினேன். அஜித் என் டிரைவரை அழைத்து நாம் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டார். என் டிரைவர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சார், எனக்கு ஒரு மாத சம்பளம் வேண்டாம், இந்த புகைப்படம் போதும் என்றார் என் டிரைவர்”

என டெல்லி கணேஷ் தெரிவித்தார்.