மஹா படத்திற்காக உதவிய தனுஷ்

568

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. இவர் ‘ரோஜா கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஒரு காலத்தில் காதல் மன்னனாக சினிமாவில் வலம் வந்தவர். அவரின் முதல் படமான ‘ரோஜா கூட்டம்’ என்ற படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அவரின் நடிப்பில் பின்னர் பல படங்கள் வந்தன. அதில் விஜய்யுடன் நடித்த ‘நண்பன்’ அவருக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

2012 க்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘நம்பியார்’. இந்தப் படம் படுதோல்வியடைந்தது. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து வரும் ‘மஹா’ என்னும் படத்தை இயக்குனர் ஜமீல் இயக்கி வருகிறார். ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த்துக்காக, இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.