“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை..! நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச் போஸ்ட்..!

424

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட பிக்-பாஸ் நிகழ்ச்சியி;ன் மூலம் பிரபலமானவர் தர்ஷன். சில விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், பிக்-பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் தர்ஷன், சனம் ஷெட்டி இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இவ்வாறு இருக்க திடீரென நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறி புகார் அளித்திருந்தார்.

இது சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு தர்ஷன் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், தன் பக்கத்து நியாயத்தை செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தர்ஷன் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து நீண்ட நாட்களாக அமையதியாக இருந்த தர்ஷன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது.

ஆனால் அவர் என்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். எந்த புகாரும் உண்மை இல்லை. இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். நான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

எது நடந்தாலும் என் பக்கம் இருப்பவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of