நான் குடிக்கவில்லை, குற்றத்தை மறுக்கும் பிக் பாஸ் காயத்ரி

486

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி வந்த நடிகை காயத்ரி ரகுராம் காவல்துறையினரிடம் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகள் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு சென்னை அடையாறு பகுதியில் சாஸ்த்ரி நகர் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி ஆய்வு செய்த போது நடிகை காயத்ரி ரகுராம் கார் ஒட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்து இறங்குமாறு கூறிய போது, நடிகை காயத்ரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மது போதையில் இருப்பதை உணர்ந்த காவலர், பிரத் அனலைசர் கருவியை கொண்டு சோதனை செய்தார். அதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறல் சட்டப்படி ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் காயத்ரி மதுபோதையில் இருந்ததால், காவலரே காரை ஓட்டி சென்று அவரது வீட்டில் பத்திரமாக விட்டு விட்டு வந்தனர்.

இந்நிலையில் இதற்கு நேர்மாறாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில், அவர் குடிக்கவே இல்லை என்றும், அவரிடம் ஓட்டுனர் உரிமமும் வாகனத்தின் ஆவனங்கள் இல்லை என்பதால் தான் அபராதம் கட்டியதாகவும், குடித்து விட்டு தன்னால் எப்படி வாகனத்தை என் வீடு வரை இயக்கிருக்க முடியும் என்றும் அவர் காவலர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய் என்று தன் குற்றத்தை மறுக்கமாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of