பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்..?

3120

கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்-பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 50 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து, இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ஆகிய 4 பேர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம், சம்யுக்தா, சனம், நிஷா, ஆரி, பாலாஜி, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 7 பேரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அனைவரும் ஆர்வத்தில் இருந்த நிலையில், அதுதொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைவான வாக்குகள் பெற்றவர் என்ற அடிப்படையில், ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Advertisement