“கிரிக்கெட் அணியில் இணைந்த கமல்..” உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

703

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த வரலாற்று நிகழ்வை திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்தை தமிழில், கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of