தமிழன் என்று சொல்லி என்னிடம் வாய்ப்பு கேட்காதீர்கள்! கமல்!

383

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.

இதில் கமல் ஒரு கட்டத்தில் திருவாரூருக்கே சென்று உரையாற்றும்போது, “தமிழகத்துக்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும். அன்றைய தேவை கட்சி உருவாகி ஆட்சி செய்தது. ஆனால் அவை அகற்றப்பட வேண்டியது இந்தக் காலத்தின் தேவை”

என்று துணிந்து சொன்னார்.

வாரிசு அரசியலை உருவாக்கியது இந்த திருவாரூர் தான் என்று நேரடியாகவே மறைந்த தலைவரை நினைவுபடுத்தும்படி பேசினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் கமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனக்கு பிறகு கட்சித்தலைமை பதவிக்கு எனது மகளோ, மைத்துனரோ வரமாட்டார்கள். ‘நான் தமிழன்’ என்பதற்காக வாய்ப்பு கேட்காதீர்கள், தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள்.

தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல்தான்.

திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. எங்கு, யாரை வைக்கிறீர்கள் என்பது முக்கியம்”

என்றார்.