கதறி அழுத நடிகர் கார்த்தி..! உயிரிழந்த முக்கிய நபர்..!

1327

பாபநாசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்பி;ன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படம் தம்பி. இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில், கார்த்திக், சூர்யா, ஜோதிகா உட்பட படக்குழுவை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கார்த்திக், நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களை சிறிது நேரம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்த வலியுறுத்தினார்.

இதையடுத்து அனைவரும் எழுந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கு காரணம் என்னவென்றால், கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்று இரவு உளுந்தூர் பேட்டை நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்ததே ஆகும்.

நித்தியாவின் உடலுக்கு இன்று அதிகாலை கார்த்தி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of