“வளர்ச்சி அல்ல..” EIA-2020-ஐ வெளுத்து வாங்கிய கார்த்தி..!

1283

உழவன் என்ற அமைப்பின் தலைவரும் பிரபல நடிகருமான கார்த்தி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2020 குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மக்களின் கருத்துகளை கேட்காமல் பெருநிறுவனங்களின் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்று கூறியுள்ளார்.

இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பது வளர்ச்சி அல்ல என்றும் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

வருங்கால சந்ததியினரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  இந்த சட்டத்தை இவ்வளவு அவசரமாக கொண்டுவரவேண்டியதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

EIA-2020 வரைவு அறிக்கை குறித்து மக்கள் தங்கள கருத்துகளை தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்பின்னர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து EIA -2020 வரைவு சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement