நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை! விஷால் என்ன செய்யப் போகிறார்!!

883

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினமான நேற்று ரிலீஸானது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது. தேவ் படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

எந்த படம் வெளியானாலும் அதை உடனுக்குடன் கசியவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

தேவ் படத்திற்கு சுமாரான விமர்சனம் வந்துள்ளபோதிலும் தமிழ் ராக்கர்ஸில் கசியாமல் இருந்திருந்தால், படத்தை தியேட்டரில் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்திருக்காது.

இந்த தமிழ் ராக்கர்சை ஒழிக்க நடிகர் விஷால், என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்றும், என்ன செய்யப் போகிறார் என்றும் இன்னும் தெரியவில்லை. தமிழ் ராக்கர்ஸ்க்கு பலியானவர்களின் பட்டியலில், தற்போது தேவும் இடம் பெற்றுள்ளது.