“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி..! வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..! அதுவும் இந்த படத்திலா..?

789

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பலரும் திரைப்படமாக எடுக்க முயற்சித்து, அதனை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டனர். இந்த வரிசையில் தற்போது வரை மணிரத்னம் இருந்து வருகிறார். ஆனால் எப்படியும் இதை எடுக்காமல் விட மாட்டேன் என்று தொடர்ந்து முயற்சித்து வருகிறார் மணி.

அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களை கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்க நினைத்து வரும் மணிரத்னம், இதனை பாகுபலியை போன்று இரண்டு பாகங்களாக இயக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புளிச்ச மாவு புகழ் எழுத்தாளர் ஜெயமோகனை, மணிரத்னம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குரங்குப் பொம்மை படத்தில் வில்லனாக நடித்திருந்த குமரவேல், இந்த திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர் ‘மேஜிக் லாண்ட்டர்ன்’ என்ற நாடகக் குழுவுக்காக பொன்னியின் செல்வன் நாவலை வெற்றிகரமாக நாடகமாக்கித் தந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.