மாற்று மதத்தின் சிலை ஏன்..? தக்க பதிலடி கொடுத்த மாதவன்..!

1174

தமிழ்த்திரையுலகில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தன்று சடங்கு நிகழ்வொன்றை தனது வீட்டில் நடிகர் மாதவன் கொண்டாடினார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து மற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். நடிகர் மாதவன் பதிவிட்டிருந்த புகைப்படத்தில், அவரது வீட்டு பூஜை அறையில் மாற்று மதத்தினர் பயன்படுத்தும் சிலையும் இருந்தது.

இதற்கு பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த சிலை வைத்திருந்ததை ஒருவர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு மாதவன் பதிலளித்தது, வைரலாக பரவி வருகிறது.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“உங்களைப் போன்ற நபர்களிடம் இருந்து எந்த மரியாதையையும் நான் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என நம்புகிறேன்.

நல்லவேளை, அந்தப் புகைப்படத்தின் அருகில் உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராக மாறிவிட்டீர்களா என கேட்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறி அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் எனக்கு எல்லா மதமும் சம்மதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.