“ஆராரோ ஆரிராரோ”! பாட்டுப்பாடி குழந்தையை எழுப்பிய மன்சூரலிகான்!

893

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதையொட்டி தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் மன்சூரலிகான், பழனி சுற்றுவட்டார பகுதிகளில் ஓடியாடி ஓட்டு கேட்டு கொண்டிருந்தார்.

அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்தவர்களிடம் ஓட்டு கேட்க சென்றார். அதில் ஒரு பெண் அங்கிருந்த மரக்கிளை ஒன்றில் சேலையை தூளியாக கட்டி, அதில் தன்னுடைய குழந்தையை தூங்க வைத்திருந்தார். குழந்தையும் நன்றாக தூங்கி கொண்டிருந்தது.

இதை பார்த்த மன்சூரலிகான் ‘நான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறேன்’ என்று சொல்லி, தொட்டிலை ஆட்ட தொடங்கினார். பிறகு ஆரீரரோ.. ஆராரிரோ.. என்று பாட்டு பாட ஆரம்பித்தார். ஆனால் தூங்கி கொண்டிருந்த குழந்தை எழுந்து கொண்டது. மேலும், அந்த தூளியில் அவர் உட்கார்ந்துக்கொண்டார்.

இதனையடுத்து அங்கு வந்த மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of