மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளனர் – நடிகர் பிரகாஷ்ராஜ்

408

கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பேசி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள பிரகாஷ்ராஜ், தனது புதிய பயணத்தை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்