“திமுகவில் பல நல்லவர்கள் உள்ளனர்.. ஆனால்..” ஸ்டாலினை விளாசிய ராதாரவி

586

திருப்பூரில் சி.ஏ.ஏ.க்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் ராதாரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த தான், தற்போது பா.ஜ.க மூலம் தேசியத்தை சுவாசிப்பதாக கூறினார்.

வாக்காளர்கள் இந்துக்கள் என்ற எண்ணத்தோடு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பெரியார் சிலை உடைப்புக்கு வீரமணி தான் காரணம் என்றும், அவர் உள்ள வரை தி.மு.க உருப்படாது எனவும் ராதாரவி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் பல நல்லவர்கள் இருப்பதாகவும் ஆனால், தலைமை சரியில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement