சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

823

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கட்சிப் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் கட்சி தொடங்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டப்பத்தில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், அமைப்புச் செயலாளர் இளவரசு ஆகியோருடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, கட்சி தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement