“என்ன இப்படி சொல்லிட்டாரு..” திருவள்ளுவர் சர்ச்சை..! ரஜினி சொன்ன அதிரடி கருத்து..!

631

உலகம் முழுவதும் உள்ள மக்களால் போற்றப்படும் நூலாக இருப்பது திருக்குறள். காரணம், இந்த நூல் எந்த மதம் சார்ந்த கருத்துகளையும், எந்த இனம் சார்ந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதே. இதனால் திருக்குறளை உலகப்பொதுமறை என்று உலக மக்களால் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளுவரின் சிலைக்கு காவி சாயம் பூசும் முயற்சி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து ரஜினி அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது. காவி சாயத்திற்கு திருவள்ளுவரும், நானும் மாட்ட மாட்டோம். எப்படியும் தப்பித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்த ரஜினி, எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில், இதனை ஒரு பெரும் சர்ச்சையாக உருவாக்கியது தேவையில்லாது என குறிப்பிட்டார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of