சின்னம்மா இறந்துட்டாங்களா? பிரச்சாரத்தில் சலசலப்பு ஏற்படுத்திய ரஞ்சித்!

830

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

“ஜெயலலிதா இருந்த போது அவருடைய புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் படத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டனர்.

சசிகலா கைதானவுடன் உடனடியாக டிடிவி தினகரனின் புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டனர். இரவோடு இரவாக 1 கோடி போட்டோக்கள் ரெடியாகிவிட்டது. அதிமுக இரண்டாக பிரிந்த போது இரு தரப்பினரும் போஸ்டரை கிழிப்பது பேனரை கிழிப்பது என இருந்தனர்.

நான் அப்போதெல்லாம் அதிமுகவின் நலவிரும்பி. ஏன் என்றால் எனக்கு எம்ஜிஆர் பெயர் வைத்த காரணத்தால் அங்கு நடக்கும் விஷயங்களை கவனிப்பேன்.”

இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து பேசும்போது, சின்னம்மா இறந்து என கூறிய ரஞ்சித் உடனடியாக சுதாரித்து கொண்டு அம்மா இறந்து அந்த ஈரம் கூட காயவில்லை என மாற்றிக் கூறினார். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் மீண்டும் அவர் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of