தமிழ்த் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் சதீஷ். இவர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா என்ற படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இளையதளபதி விஜயுடன் கத்தி, பைரவா ஆகிய திரைப்படங்களை இவர் நடித்துள்ளார்.
பைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷிற்கும், சதீஷிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு இருவரும் அதனை மறுத்தனர். இந்த கிசுகிசுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சதீஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இவர் திரையுலக பிரபலம் ஒருவரின் மகளை திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.