“எப்போதும் பாத் ரூமில் இருப்பது யார்…?” வச்சி செய்த சதீஷ்! கோபத்தில் கவின் ஆர்மி!

847

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின்.

இவர் தற்போது பிக்-பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கவின் வீட்டில் நுழைந்ததில் இருந்தே பெண்களிடம் வரம்பு மீறி நடந்து வருவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சதீஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில், எப்போதும் பாத் ரூமில் இருப்பது பேஸ்ட்-ஆ, பிரஷ்-ஆ, கவினா என்று டுவீட் செய்துள்ளார்.

இவரின் இந்த டுவீட்டுக்கு கவினின் எதிர்ப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கவின் ஆர்மி மட்டும் தம் பிடித்துக்கொண்டு போராடி வருகின்றனர்.

Advertisement