முதல் ஜேம்ஸ்பாண்ட் காலமானார்..!

2108

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான திரைப்படங்களில் ஒன்று ஜேம்ஸ்பாண்ட். இந்த வகையான திரைப்படங்கள், பல்வேறு வருடங்களாக வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த சீரிஸ் படங்களில், முதன்முறையாக ஹீரோவாக நடித்தவர் ஷான் கானரி. ஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் 1930-ம் ஆண்டு பிறந்த இவர், சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் மற்ற படங்களுக்காக பெற்றுள்ளார்.

கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 90. இவரது உயிரிழப்பிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement