நடிகர் செந்திலுக்கு கிடைத்த பதவி..! டிடிவியின் அதிரடி முடிவு..!

567

தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து செய்த லூட்டிகள் ஏராளம். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எஸ்விஎஸ்பி மாணிக்க ராஜா கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், நடிகர் செந்தில் அமைப்பு செயலாளராகவும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சிவா ராஜமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ கே.கதிர்காமு, எஸ்.கே.தேவதாஸ், ஹென்றி தாமஸ் ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of