பிரபல நடிகர் முடி வெட்டியதால் கொலை மிரட்டல்!

279

மல்லுவுட்டில பிரபலமான நடிகர் ஷேன் நிகம். இவர் தற்போது ஜோபி ஜார்ஜ் தாயாரித்து வரும் வெயில் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்குச் சம்பளமாக ரூ 30 லட்சம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கியவுடன் 40 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஷேன் நிகம் மற்றும் ஜோபி ஜார்ஸ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஷேன் படப்பிடிப்பின் போது வைத்திருந்த ஹேர் ஸ்டலை மாற்றி வேறோரு படத்தில் நடித்ததாக தகவல் கூறப்படுகிறது. ஹேர் ஸ்டைல் மாற்றியதால் ஜோபி ஜார்ஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் சங்கத்தில் ஷேன் புகார் அளித்துள்ளார்.

இந்த ஹேர் ஸ்டலை அவரிடம் கேட்டு தான் வைத்தேன் ஆனால் தற்போது படத்தின் கன்டினியூட்டி இருக்காது என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். என்று புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் நடிகர் சங்கம் இது உங்கள் சொந்த பிரச்சனை என்று பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஜோபி கூறியிருப்பதாவது. என் படம் முடியும் முன்பே வேறு படத்தில் நடிப்பதாக தகவல் வந்தது.

என் படத்தின் ஹுட்டிங் வராமல் நாள் கடத்தி கொண்டே இருந்தார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நான் கொலை மிரட்டல் ஒன்றும் விடவில்லை. என்று கூறியிருக்கிறார்.