“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..!

600

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு அவரது வெறித்தனமான பேச்சு பெரும் பிரமிப்பை கொடுத்தது.அதனை தொடர்ந்து நேற்று பிகில் இசைவெளியீட்டு விழா நேற்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.

அதனை கண்ட நடிகரும், விஜய்யின் தீவிர ரசிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு இப்போ கொஞ்சம் நாளா குசும்பும் சேர்த்து வருகிறது என கிண்டலாக கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of