நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

735

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைதியாக போராடுபவர்களை தீவிரவாதிகள், தேசதுரோகிகள், கூலிப்படையினர் என்று சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.

எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கிறார்கள் என்றும் பாசிசம், ஒற்றைக் கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ்நோக்கி செல்கிறோம் என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள் என்றும் அவர்களை புறக்கணியுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement